பொருள் மன்னன், மருள் மன்னன்: பொருள் மன்னன் குபேரன். அவனைக் கைப்பற்றி, அவனிடம் இருந்த புட்பக விமானமாகிய தேரைப் பறித்துக் கொண்டான், மருள் மன்னனாகிய இராவணன். அவனை ஒரு விரலால் எற்றிப் பிறகு வாளுடன் நாளும் ஈந்த திறத்தை அரநெறித் தலப்பாடலில் குறிக்கின்றார் அப்பர். சொற்சுவையும் பொருட்சுவையும், அருட்சுவையும் கனிந்த அப்பாடலைக் காண்போம். பொருண்மன் னனைப்பற்றிப்புட்பகங் கொண்ட | மருண்மன் னனையெற்றி வாளுடனீந்து | கருண்மன்னு கண்டங் கறுக்கநஞ்சுண்ட | அருண்மன்ன ராரூ ரரநெறியாரே. | -தி.4 ப.17 பா.11 |
அரவு தீண்டுவதில்லை, தீண்டினும் இறப்பு இல்லை: திங்களூரில் அப்பூதி அடிகள் திருமகனார் மூத்த திருநாவுக்கரசு வாழை இலை கொய்தபோது அரவு தீண்டியது. அவரை அப்பர் அத்தலத்து இறைவன் சந்நிதியில் கிடத்தி, “ஒன்றுகொலாம்...” என்னும் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார். இதனால் இன்றுவரை அவ்வூரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. இது அவ்வூரவர் அநுபவம். ஞானசம்பந்தர் வரலாற்றில், திருமருகலில் விடம் தீண்டிய வணிகனை “சடையாய் எனுமால்...” என்னும் பதிகம் பாடி விடம் நீங்கச் செய்தார். இன்றுவரை இவ்வூரில் அரவு தீண்டினாலும் யாரும் இறப்பதில்லை என்பது அவ்வூரவர் அநுபவம். வீடுகளில் பாம்பு நடமாட்டம் இருக்குமானால் “ஒன்று கொலாமவர்” என்னும் பதிகத்தை ஆசாரத்துடனும் பக்தியுடனும் பாராயணம் செய்தால் பாம்பு நம் கண்ணில் படுவதில்லை. இது இன்றும் பலரது அநுபவம். சிந்திப்போம். செயல்பட்டுப் பயனடைவோம். புராணம்: புரா - நவம். புராணம். புரா என்பது பழமையையும், நவம் என்பது புதுமையையும் குறிப்பது. பழமை என்பது புதுமையைத் தன்னகத்தே கொண்டிருப்பது. உயிர்களின் தகுதிக்கேற்ப அவ்வப்
|