போது பழமை தன்னகத்தே உள்ள புதுமையை வெளிப்படுத்துகிறது. எனவே பழமையிலிருந்துதான் புதுமை தோன்றுகிறது. இதனால்தான் மணிவாசகர் (தி. 8திருவா.) திருவெம்பாவை (பா.9)யில், “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்றார். இப்படிப் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருக்கும் பேரறிவுடைய பொருளே சிவபரம்பொருளாகும்.. இப்பரம்பொருளையே புராணன் என்று பேசுகின்றன. திருமுறைகள். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் தேவாரத்தில் “புராணன்” என்ற இச்சொல்லைக் கையாளுகிறார். இப்புராணன் நமது உள்ளத்தில் சிறப்பாக எழுந்தருளி அருள்புரியவேண்டுமானால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அருளிச் செய்கிறார். முதலில் நமக்குப் பரம்பொருள் இடத்தில் அகனமர்ந்த அன்பு வேண்டும். முகனமர்ந்த அன்பு பயன்படாது. அன்புடையார்கட்கு அறுவகைக் குற்றங்கள் கடியப்படவேண்டும். அவையாவன காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பனவாம். அடுத்து ஐம்புலன்அடக்கம் வேண்டும். இந்நிலையிலேதான் உண்மை ஞானம் கைவரப்பெறும். அங்ஙனம் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றோர் உள்ளத்தாமரையிலேயே புராணனாகிய இறைவன் எழுந்தருளிஅருள் வழங்குவான். இக்கருத்தமைந்த பாடல் பகுதிகாண்க. “அகனமர்ந்த வன்பினராயறுபகைசெற் | றைம்புலனுமடக்கிஞானம் | புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் | துள்ளிருக்கும் புராணர்.....”` | தி.1 ப.132 பா.6 |
இப்புராணருடைய வரலாறே புராணங்கள். இவர் பழங்காலம் தொட்டே அடியார்கட்கு அருளிய செயல்கள் புராணம் என்று பேசப்படுகிறது. அப்படி உள்ள தலபுராண வரலாறுகளை அப்பர் பல இடங்களில் குறிப்பிட்ட போதிலும் திருக்குறுக்கை வீரட்டானத் திருப்பதிகமாகிய “ஆதியிற்பிரமனார்தாம்” என்னும் பதி.49இல் முதற்பாடலில் பிரமனுக்கு அருள்செய்த வரலாறும், இரண்டாம் பாடலில் மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த வரலாறும், மூன்றாம்பாடலில் சண்டீசர்க்கு அருள்செய்த வரலாறும், நான்காம்பாடலில்
|