குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் | பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் | இனித்த முடைய வெடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால் | மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே |
என்ற பாடலால் இக்கருத்தையே வேறு ஒருவகையில் விரித்துரைக்கின்றார். “அரிது அரிது மானிடராதல் அரிது” என்றபடி பெறுதற்கரிய மானிடப்பிறவியைப் பெற்றவன் அவ்வுயர் பிறவிக்கேற்ப இறையுணர்வு இல்லாதிருப்பானானால் அவன் தோன்றலின் தோன்றாமையே நன்றாம் என்கிறார். தோன்றில் புகழொடு தோன்றுக என்னுமாப்போலே, தோன்றில் பிறவிப் பயனை எய்துவிக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு உடையவனாய்த் தோன்றுக. அதுவே மனித்தப்பிறவியின் பயன். அஃதின்றேல் அறிவுக் குறைவுடைய ஏனைய பிறவிகளாகப்பிறந்திருக்கலாமே என்பது கருத்து. இதனைத்தான்அப்பர் “இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் சிறப்புடைய இம்மனித்தப் பிறவியும் வேண்டுவதே. காணப்பெறாவிட்டால் இவ்வரிய மானிடப்பிறவியால் பயன் இல்லை. எனவே புல்லாய், பூண்டாய், புழுவாய் விலங்காய், பறவையாய் பிறந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். இதனால் பிறவி வேண்டும் என்பது கருத்தல்ல. கிடைத்தற்கரிய பிறவியை அப்பிறவிக்கேற்பப் பயனுடையதாக்குக என்பதே கருத்து. மேலும் இக்கருத்தை அப்பர் திருநாகைக்காரோணப்பாடல் (தி.4 ப.71 பா.8) ஒன்றில், “............ | கற்றவர் பயிலு நாகைக் காரோணங்கருதி யேத்தப் | பெற்றவர் பிறந்தார் மற்றுப்பிறந்தவர் பிறந்தி லாரே.” |
என்ற வரிகளால் வலியுறுத்தியுள்ளமைகாண்போமாக. குழல் வலம்கொண்டசொல்லாள்: இதுவரை இப்பாடலின் பிற்பகுதியைப் பார்த்தோம். குழல் வலம் கொண்ட சொல்லாள் என்பது அரிய பிரயோகம். தம்மக்கள் மழலைச் சொல்லைக் குழலுக்கும் யாழுக்கும் ஒப்புமை காட்டுகிறார் வள்ளுவர். யாழைப்பழித்த மொழியம்மை என்பது வேதாரண்யம் அம்பாளின் திருப்பெயர். இப்பாடல் பதிகம் திருவாரூரைப் பற்றியது. ஆரூர் அம்பாள் பெயர் நீலோத்பலாம்பாள், அல்லியங்கோதை என்றிருக்கிறது. கமலாம்பாளும் தவக்கோலத்தில் உள்ளார். குழல்
|