பக்கம் எண் :

73
 

‘திங்கள் மதிக் கண்ணியானை’ (பா. 30) என்ற தொடர்க்கு விளக்கம் எழுதுங்கால்; ‘திங்கள் மதி ஒருபொருட் பலபெயர்; திங்கள் சாந்திரமானம்பற்றிய திங்களை விளைவிப்பது. காரணப் பெயர். மதி பிறை என்னும் பொருட்டு. சந்திரனுக்கு வடமொழியில் மதி என்னும் பெயரில்லை. இரண்டும் தமிழ்ச் சொல்லே’ என்ற விளக்கவுரை நோக்கற்குரியது.

‘பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர்வேனை’ (பா. 47) என்றவிடத்துப் பம்பு - பப்பு - பரப்பு - விரிதல். குவிதல் (நிவிர்த்திக்கு இடம்) இல்லாமை’ என்று எழுதியிருத்தல் சிந்தித்து உணர்தற்குரியது.

‘இறுத்தானை எழில் முளரித் தவிசின்மிசை’ என்புழி (பா. 51) ‘தவிசு - (தவிர் + து) தங்குதலுடையது, இருக்கை. காரணப் பெயர். தவிர்து என்றதன் மரூஉ’ என்று எழுதுதல் ஓர் புதிய சிந்தனைக் கிளர்ச்சியாதல் ஓர்க.

‘ஓர் ஓதம் ஓதி உலகம் பலிதிரிவான் என்கின்றாளால்’ என்புழி (பா. 59) ‘ஓதுவது - ஓத்து; ஓதம்; ஓது - பாடு; ஓத்து - பாட்டு; ஓதம் - பாடம் எனவரும் சொல்லமைதி உணர்க. பாடம் என்னும் வடசொல் வேறு, இது வேறு. ‘பாடம் (பாடு+அம்) கருத்தே சொல்வகை சொற்பொருள்’ என்புழி வருவது தமிழ்ச்சொல்லுமாம்; ‘பாடம் படித்தான்’ என்புழி நிற்பது வடசொல் என்ற விளக்கம் உணர்தற்கினியவோர் பகுதியாகும்.

‘இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தனே’ (பா.65) என்றவிடத்து ‘இணையடை என்பதன் மரூஉ இண்டை’ என்று விளக்கி, சுமையடு என்பது சும்மாடு என மருவியதறிக என்று உவமையும் காட்டியிருத்தல் இனியதாதல் தெரியலாம்.

‘சிவனெனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மையுளதே’ என்ற பொதுப் பதிகத்து‘ ஒலிசெய் என்பது ஓசை என மருவிற்று’ என்று விளக்குதல் ஓர் புதிய செய்தி.

‘நள் + து = நண்டு; நள்ளி என்றதால் விளங்கும்’ என்று 206 ஆம் பாடற்பகுதியில் எழுதி விளக்குதல் அறியத்தக்கது.

‘ஏறனார் ஏறுதம்பால்’ (பா.219) என்ற பாடற் பகுதிக்கு உரை விளக்குகையில். ‘நில் + து,நீல் + து = நீறு என்று கூறி, செல் + து, சேல் + து = சேறு,வெல் + து, வேல் + து = வேறு முதலியன போல்வது என்று