பக்கம் எண் :

87
 

இவ்வாறே பெரியபுராணத் திருவிருத்தம் ஒன்றின் உண்மைப் பொருளையும் விளக்குகின்ற பொறுப்பு நம் உரையாசிரியர்க்கு வந்துவிடுகிறது. மரபு காக்க வேண்டுமென்ற மனப்பாங்கின் உரத்தால் இவ்வாறு இடம் கண்ட விடத்தெல்லாம் இனிது விளக்கிச் செல்லல் இவர்தம் மியல்பு.

“சொற்றுணை வேதியன் சோதிவானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே”

(பா. 104)

என்ற பாடல் உரையில் இந்த இயல்பு மிளிர்கின்றது. கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை

“கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்கு டியரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்நன்றே”

என்றுள்ள வாய்மையாதல் உணர்க. இருவினையாகிய பாசத்தால் மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின் மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரையேறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந் தெழுத்து, உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ் வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ? (தி.12 பெரியபுராணம். பா. 1394) ஒருகல் முக்கல் என்னும் நயம் அறியாமல், ‘இருவினைப் பாசமும்’ எனப் பிரித்துப் பொருந்தா உரையெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது” என்ற உரைப்பகுதி இதனை உள்ளடக்கி நிற்றல் காண்க. யாண்டும் ஓர் பெரியபுராணப் பாடலில்கூடச் சம்பிரதாயத்துக்கு மாறானபொருள் எழுதுதல் கூடாது என்பது இவ்வுரையாசிரியர் கொள்கை.

‘சம்பிரதாய தீபம்’ என்ற நூலையே தமிழகத்துக்கு வழங்கிய தருமையாதீனத்தே வாழும் புலவராகிய இவர் சம்பிரதாயங்களைக் காக்கக்கண்ணுங் கருத்துமா யிருத்தலில் வியப்பில்லையல்லவா?

இலக்கணச் சூத்திரங்களை இவ்வுரையாசிரியர் விளக்கிச்