பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை11

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.

-தி. 5ப. 21பா. 8

பற்றினாரைப் பற்றா வினை:
     பற்றும் பாசமும் விடவேண்டுமானால் பற்றற்ற பரம்பொருளை நாம் பற்றவேண்டும். அப்படிப் பற்றினால் நாளடைவில் நமது பற்று அற்றுப்போகும். பற்றுள்ளாரைப்பற்றாகப் பற்றினால் நாளும் பற்று மிகுமே தவிரக் குறையாது. இதனையே ஞானசம்பந்தரும் "கற்றாங்கு எரியோம்பி" என்ற பாடலில் "முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" என்கின்றார். அதே கருத்தை இங்கு அப்பர் கூறும் அரிய பாடலில் காணபோம்.
புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்உடை யார்அமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

-தி. 5ப. 23பா. 3

நெஞ்சம் வாழி:
     நெஞ்சை வாழ்த்துவது பெரியோர் இயல்பு. வாழ்க எம் மனமும் மணி நாவும்மே" என்பார் குமரகுருபரர். நெஞ்சம் நல்லதே நினைத்தால் அது நம்மை நன்னெறியில் செலுத்தும். இறைவனை நினையும் நெஞ்சம் நல்ல நெஞ்சம். எனவேதான் அப்பர்பெருமான் திருநின்றியூர்த் திருக்குறுந்தொகையில் "நெஞ்சமே நீ அஞ்சி வழிபட்டாலும் சரி அன்புடனே வழிபட்டாலும் சரி அது அந்நெஞ்சுடையானை உய்விக்கும் ஆற்றல் உள்ளது. எனவே பெருமானை அச்சத்துடனோ அன்புடனோ வழிபட்டாலும் நீ வாழ்க" என வாழத்துகிறார் அப்பர் அறியாப்பருவத்தினர் அச்சம் காரணமாகவும். அறிந்தமெய்யுணர்வினர் அன்பு காரணமாகவும் வழிபடுவர் என்பது அறியத்தக்கது.
அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

-தி. 5ப. 23பா. 9

அந்திக்கோன்:
     இச்சொல் அரிய பிரயோகமாய் வந்துள்ளது. அந்தி-மாலைப்பொழுது. இரவு-இரவில் தண்ணளியுடன் குளிர்ச்சியாக ஆட்சிபுரிபவன் சந்திரன். இதனை, "அந்திக் கோன்தனக் கேஅருள்