எனவேதான் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார் நாவரசர். அவ்வலஞ்சுழி நீர்வளம் சூழ்ந்தது. நீரில் மீன்வளம் மிக்கது. அம்மீனோ மலங்கு மீன் வகையைச் சேர்ந்தது. அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த வலஞ்சுழித் தலத்தை வலங்கொள்வார் திருவடிகள் என் தலைமேலன என்கிறார் நம் ஆசாரியமூர்த்தியாகிய அப்பர். இவ்வழியை நாமும் பின்பற்றி உய்யலாமே. அப்பாடல் |
இலங்கை வேந்தன் இருபது தோள்இற நலங்கொள் பாதத் தொருவிரல் ஊன்றினான் மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி வலங்கொள் வார்அடி என்தலை மேலவே | |
-தி.5ப.66பா.10 |
இதே கருத்தமைந்த ஞானசம்பந்தரின் கச்சியேகம்பப் பாடலும் காண்க. |
தூயானைத் தூயவா யம்மறை ஓதிய வாயானை வாளரக் கன்வலி வாட்டிய தீயானைத் தீதில்கச் சித்திரு ஏகம்பம் மேயானை மேவுவார் என்தலை மேலாரே | |
-தி.2ப.12பா.8 |
பறப்பையும் பசுவும் படுத்து: |
பறப்பை என்பதற்கு பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண் என்பர். பசு - வேள்விப்பசு. படுத்து என்பதற்கு சிறந்த பொருளாகக் கொள்ளுதல் என்பர். வேள்வித்தீயின்கண் நெய்யைச் சொரிந்தும் வேள்விச்சாலையின்கண் பசுவிற்கு வாயுறை கொடுத்தும் ஆராதனை செய்து வேள்வியை நடத்தும் அந்தணர்வாழும் ஊர் திருவாஞ்சியம் என்கிறார் அப்பர். இக்கருத்துள்ள பாடல் காணபோம். |
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல திறத்த வும்உடை யோர்திக ழும்பதி கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர் தரு சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே | |
-தி.5ப.67பா.2 |
கறை பொருந்திய பிறை அணிந்தவர் என்ற குறிப்பு அரிய பிரயோகமாகக் காணப்படுகிறது. கண்ணுதற் பெருமான் எழுந்தருளியிருப்பதால் சிறப்புடையதாயிற்று திருவாஞ்சியம் என்னும் இத்தலம். |
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறர்: |
திருநள்ளாற்று இறைவர் கொல்லும் தன்மை வாய்ந்த நஞ்சினைத்தன் கழுத்தில் கொண்டவர், வியத்தகு செயல்களினால் விளங்கும் ஞானச் செல்வியாகிய சிற்சக்திக்குக் கணவராய் உள்ளவர். இவர் வஞ்ச நெஞ்சத்தார்க்கு அருள் வழங்கமாட்டார். மனம் நைந்த |