என்பது வரலாறு. அது இப்பாடலில் குறிக்கப்படுகிறது கோவிற்கும், விசயனுக்கும் அருள் செய்த வரலாறு குறிக்கப்படுவதால் இதுவே கோவந்தபுத்தூராகிய விசயமங்கை எனப்பெறுகிறது. மேலும் பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் பணி செய்து, வேண்டியவரங்களைப் பெற்றான் என்பதும், இப்பதிகத்தின் எட்டாவது பாடலில் காணப்படுகிறது. விசயனாகிய அர்ச்சுனன் பூசித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது. அப்பாடல் காண்க |
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டும் நல்வரம் கொள்விச யமங்கை ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் காண்ட லேகருத் தாகி யிருப்பனே | |
-தி. 5ப. 71.பா. 8 |
வந்து கேண்மின்: |
மக்களைப் பல கோணங்களில் அழைத்து அறம் உரைக்கும் திறன் அப்பர் வாழ்வில் அளப்பிலவாம். "மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்" "நம்புவீர் இது கேண்மின்கள்" "பாருளீர் இது கேண்மின்" போன்றன சில எடுத்துக்காட்டுக்கள். |
இந்த அமைப்பில் விசயமங்கையிலும் ஓர் அழைப்பு விடுக்கிறார். வந்து கேண்மின், மயல் தீர் மனிதர்காள் என்று அழைக்கிறார். விசயமங்கையில் உள்ள நம் எளிய தலைவன், நமது சிந்தையில் நினைவார்களைச் சிக்கெனப் பிடித்து, தன் பந்துவாக்கி, உய்யக்கொள்வான் என்கிறார். அப்பாடல்: |
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து ஆக்கி உயக்கொளும் காண்மினே | |
-தி.5ப.71பா.9 |
உள்ளங்கை - நெல்லிக்கனி: |
உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. தப்பாமல் கிடைத்தே தீரும் என்பதற்கு இப்பழமொழி கூறப்படுகிறது. புறநானூறும் "கையகத்தது அதுபொய் ஆகாதே" எனக்கூறுகிறது. "சிற்றம்பலத்தனைத் தலையால் வணங்குவார் தலையானார்களே" (தி. 1ப. 80பா. 7) என்பதும் இக்கருத்தே பற்றியது. |
"தலையால் வணங்குவார் தலையாவார்களே" என்று எதிர்காலத்தால் கூறவேண்டும். உறுதிபற்றி இறந்த காலத்தாற் கூறினார் ஞானசம்பந்தர். அதைப்போல் மையலுற்று மறந்துவிடாமல் நினைப்பவர்க்கெல்லாம் நிச்சயமாக கையில் ஆமலகக்கனி ஒக்குமே |