பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை29

  கொண்டு வழிபடுகின்றனர். அப்பெருமானை ஏழை அடியார்கள் திருக்கொடுமுடி என்று சொன்னவுடனேயே தீய வினைகளும் பிறவிக்கு ஏதுவாகிய கருவும் கெடும் என்கிறார். தீவினை கெடும் எனவே நல்வினையும் கெடும் என்பது பெற்றாம். இருவினையும் பிறவிக்கு வித்தாம். இருவினை அற்றால் பிறவிக்கு ஏதுவாகிய கருக்கெடும் என்று அருளியுள்ளார். இது கைகண்ட யோகம் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.
 
நெருக்கி அம்முடி நின்றஇசை வானவர்
இருக்கொ டும்பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி என்றலும் தீவினைக்
கருக்கெ டும்இது கைகண்ட யோகமே.
 

-தி.5ப.81பா.5.

  வான்மியூர் ஈசன் வண்மை:
  வான்மியூர் ஈசன் அடிதொழுவார் செய்த பாவம் பறைந்திடும். ஆதியே என்று தொழுவாரது மருளை அறுத்திடும். எந்தை ஈசன் என்று ஏத்துவார் முன் வந்து நிற்பன் வான்மியூர் ஈசன், ஆனால் உள்ளம் உள்கலந்து ஏத்துவார்க்கே இப்படி அருள்செய்வான். கள்ளம் உள்ளவர்க்குக் கசிவான் அல்லன். எல்லா நலன்களும் அருளும் வள்ளலாய் இருந்தும் வஞ்சகருக்கு அருள்செய்யான் என்றும் குறிப்பிடுகின்றார். தொழுதெழுவார் வினை மடங்க நின்றிடும். "அஞ்சி நாண்மலர் தூவி அழுவாரானால் நம் உள்ளத்தில் பெருமானை நினைக்க வொட்டாமல் தடை செய்கின்ற வஞ்சனையையே தீர்த்து அருள் செய்பவர். பாதிப்பெண்ணுருவாய பரமனே என்று ஓதி உள்குழைந்து ஏத்த வல்லவர்களின் வாதைகளைத் தீர்த்திடுவார் வான்மியூர் ஈசன். வாட்டம் தீர்த்திடுவார். கயிலை மலையை எடுத்த இராவணனே ஆர்வமாக அழைத்துத் துதித்தலும் பெருமான் வாரமாய் வரம் அருளினன் என்கிறார். அப்பதிகத்தின் ஒரு பாடல் காண்போம்.
 
உள்ளம் உள்கலந்து ஏத்தவல் லார்க்கு
அலாலகள்ளம் உள்ளவ ழிக்கசி வான்அலன்
வெள்ள மும்அர வும்விர வும்சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே
 

-தி.5ப.82பா.4

  வாழ்த்தலே வாழ்வாம்:
        எல்லா நலங்களையும் வழங்குபவன் ஈசன் ஒருவனே மற்றையோர் ஒவ்வொன்றையே கொடுக்க இயலும். அதனால்தான் சிவபெருமானை வள்ளல் என்று நமது சமயாசாரியர்கள் கூறிப்போந்தனர். இங்கும் அப்பர் திருமணஞ்சேரி வள்ளலை வாழ்த்துவதே வாழ்வாவது என்றுஅருளுகிறார். நமது வாழ்விற்கே