பக்கம் எண் :

30ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

  முதலாக இருப்பவர் அவராதலின் அவரை வாழ்த்தாத வாழ்வு வாழ்வாகாது. அதனால்தான் மணிவாசகரும் திருப்பள்ளியெழுச்சி முதல் பாடலில் "போற்றி என்வாழ்முதவாகிய பொருளே" என்று போற்றினார். அதனையே வேறு ஒருவகையில் அப்பர் போற்றுகிறார்.
 
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேல்அவர்
அள்ளல் ஆர்வயல் சூழ் மணஞ் சேரிஎம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ்வு ஆவதே.
 

-தி.5ப.87பா.5

  மேலும் ஞானசம்பந்தர் அருளிய "தோடுடைய செவியன்" என்ற பதிகத்தில் மூன்றாம் பாடலின் (தி.1ப.1பா.3) சொற்றொடர் அமைந்த பாடல் ஒன்றும் இப்பதிகத்தில் காணலாம்.
 
நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திருமணஞ் சேரியார்
ஏர் பரந்துஅங்கு இலங்கு சூலத்தரே.
 

-தி.5ப.87பா.6

  ஈசன் இணையடி:
  மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல், இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. அப்பாடல் வருமாறு.
 
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
 

-தி.5ப.90பா.1

  நமச்சிவாயவே:
  மாசில் வீணை என்ற பதிகத்தின் இரண்டாம் பாடலில்