படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்நமது ஈசன் அடியரை விடைகொள் ஊர்தியி னான்அடி யார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே. | |
-தி.5 ப,92 பா,7 |
ஈசன் என்னை அறிந்தது : |
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான், தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலன், என்னைத் தன்அடி யான்என்று அறிதலும், தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே | |
-தி,5.ப.9.பா.8 |
என்ற பாடற்கருத்தை ஒட்டிய பாடல் ஒன்று மறக்கிற்பனே என்னும் மகுடம் உடைய திருப்பதிகத்தில் வருவது சிந்திக்கத்தக்கது. அப்பாடல் காண்க. |
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன் ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால் ஈசன் சேவடி ஏத்தப்பெற் றென்இனி ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே | |
-தி.5 ப.93 பா.3 |
இங்குற்றேன் : |
இலிங்கபுரணத் திருக்குறுந்தொகை, திருமாலும் பிரமனும் தாமே தலைவர் என்ற செருக்கித் தருக்கியபோது சிவபெருமான் சோதிப்பிழம்பாய்த் தோன்றினான். அத்தோற்றமே சிவலிங்க வடிவம். அப்பெருமானைப் பொய்யும் பொக்கமும்(வஞ்சகம்) போக்கிப் புகழ்ந்திலர், எருக்கங்கண்ணி கொண்ட இண்டை புனைந்திலர். இவர்கள் எப்படி இறைவனைக் காண்பர். காணகில்லார். இந்த வரலாற்றை இப்பதிக இறுதிப்பாடலில் தெளிய விளக்கியருள்கிறார் அப்பர். |
செங்க ணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற் றேன்என்று இலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே | |
-தி,5 ப.95 பா,11 |
சித்தத் திருக்குறுந்தொகை : |
இப்பதிகம் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது. சித்தத்துள்ளே சிவபெருமானைச் சிந்திக்கும் திறம் கூறுவது. இப்பதிகம் சிந்திப்பார் மனத்தால் என்று தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. |
இதனுள் அகரம் முதல் ஒளகாரம் வரை 12 உயிரெழுத்துக்களும் 2ஆம் பாடல் முதல், பாடலின் முதல் எழுத்தாகத் தொடங்குகிறது. பிறகு ககரம் முதலிய 14 மெய்யெழுத்துக்களையும் |