பக்கம் எண் :

34ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

முதலெழுத்தாக வைத்து இத்திருப்பதிகத்தைப் பாடி உள்ளார்.
     இதில் ஒரு பாடல் பரஞ்சுடர் பாதிப்பெண்ணுருவானவன் என்பதை அறிவிக்கிறது. கந்தபுராணத்துள் அசுரகாண்டத் தொடக்கத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடல் "ஊரிலான்" எனத் தொடங்குகிறது. அதைப் போலவே இங்கு அப்பர் ஒரு பாடல் பாடியுள்ளர்.
ஊர்இ லாய்ஒன்று ஒன்றாக ஒரைப்பதுஓர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
கார்உ லாம்கண்ட னேஉன் கழலடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே

-தி.5 ப,97 பா,7

இப்பாடலுக்கு ஒப்பான கந்தபுராணப் பாடலும் காண்க,
ஊரி லான்குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்,

-கந்தபுரணாம் அசுர பா.1

குரங்காடுதுறை:
     திருவையாற்றிற்குக் கிழக்கே பத்து கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் வடகரையில் இருப்பது வடகுரங்காடுதுறை. இது வாலியால் பூசிக்கப்பெற்ற பாடல்பெற்ற தலம். கும்பகோணத்திற்குக் கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருப்பது சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட தென்குரங்காடுதுறை. இத்தலத்து எழுந்தருளியுள்ள இறைவன் மணவனாக, கணவனாக, எண்குணவனாக, அன்புடை அடியார்கட்கு அணவனாக உள்ளமையை இத்தலப் பதிகப்பாடல் ஒன்றில் அப்பர் குறிப்பிடுகிறார்.
கணவன்:
     சிவம் என்ற சொல்லிற்கு மங்கலம் என்பது பொருள். இறவாமல் பிறவாமல் அமங்கலம் இன்றி என்றும் ஒரே பெற்றியனாய் இருப்பவன் சிவபெருமான் ஒருவனே. மனித வாழ்வில் மங்கலம், அமங்கலம் இரண்டும் கலந்தே வரும். "குறைவில் மங்கலக் குணத்தனாகலின் சிவம் என்றனர்" பெரியோர்.
     நமக்குரிய மணவன் என்பதெல்லாம் உபசாரமே. உண்மை இல்லை. உண்மை மணவன் மகேச்சுவரனேயாவான். மணவன் என்ற சொல்லும் திருமுறையிலும், மற்ற இலக்கியங்களிலும் அரிய பிரயோகமாகும். நம்பெருமான் என்றும் மணவனாயிருக்கிறான். மலைமகளின் நெடுமங்கலக் கணவனாயிருக்கிறான். நெடுமங்கலம்