பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை35

என்பது என்றும் அம்மையப்பர் மங்கலமாகவே இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
     கலைஞானிகள் காதலுடன் - விருப்பத்துடன் ஒன்றாயிருக்கிற பெருமானை எட்டாகப் பிரித்துப் பெரும்பயன் காண்கின்றனர். எண்குணவன் என்கிறார் அப்பர். திருவள்ளுவரும் கலைஞானியல்லவா?. அவர் இறைவனை எண்குணத்தான் என்கிறார்.
     எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பன. எண்குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்படாதவாறுபோல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார். இங்ஙனம் மணவனாய், கணவனாய், குணவனாய் இருக்கும் இறைவன் குரங்காடுதுறையில் அன்புடை அடியவர்கட்கு அணியனாய் அருள்புரிகிறான் என்று பாடியுள்ளார். அப்பாடல் காண்க.
மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதல்எண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காண்அன்பு செய்யும் அடியர்க்கே.

-தி.5ப.63பா.4

     கண் - அவன். கணவன். மனைவிக்குக் கண்ணாக இருப்பவன் என்ற பொருளில் கணவன் என்ற சொல் வழங்கி வருகிறது. உடல் உறுப்புக்களுள்ளே கண்தான் மிகச் சிறந்த உறுப்பு. கருவிலும் முதலில் தோன்றும் உறுப்பு கண்ணே என்று மருத்துவர்களும் குறிக்கின்றனர். கண்ணைக் கொண்டே ஒருவரின் தகுதியைக் கண்டுபிடிக்கலாம். இதுபற்றியே கோவை நூலும், கண்ணிற் சிறந்த உறுப்பிலை யாவதும் காட்டியதே.. என்று கூறுகிறது, அப்பரோ, மற்றோர் இடத்திலும் கணவன் என்ற சொல்லைக் காட்டியுள்ளார். திருச்சத்திமுற்றத் திருவிருத்தத்தில் "வில்நேர் புருவத்து உமையாள் கணவா விடிற்கெடுவேன்" என்பது அவர் திருவாக்கு.
ஙகரவெல் கொடியான்:
     ஙகர இனப் பதின்மூன்றெழுத்துள் ங என்னும் உயிர்மெய்யெழுத்தும், ங் என்ற மெய்யெழுத்தும் மட்டுமே மொழியில் பயின்று வருவன. ங இனத்தில் மற்ற ஙா, ஙி முதலிய எழுத்துக்கள் மொழியில் வருவதில்லை. இருப்பினும் ங என்ற எழுத்துடன் மற்ற 11 எழுத்துக்களும் சுவடியில் வாழ்ந்து வருகின்றன, அதைப் போல்