36 | ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை | (ஐந்தாம் திருமுறை) | |
| மக்களும் சுற்றத்தாரைத் தழுவி வாழவேண்டும் என்பதற்கு ஒளவையார் இந்த ஙகரத்தை உதாரணமாகக் காட்டுகிறார், "ஙப்போல்வளை" என்பது ஒளவையின் ஆத்திச்சூடி, ஙகரம் எப்படி அதனுடன் உள்ள மற்ற 11 எழுத்துக்களும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவற்றை உடன் வைத்துப் போற்றுகிறதோ அதைப் போலவே திறன் உடைய ஒருவன் திறன் இல்லாத சுற்றத்தாரையும் உடன் வைத்துப் போற்ற வேண்டும் என்பதற்கு இவ்வுதாரணத்தைக் காட்டியுள்ளார். | இச் சித்தத்திருக்குறுந்தொகையில் ஙகரத்தை முதலாக வைத்துத் தொடங்கும் பாடலில் "ஙகர வெல்கொடியான்" என்று தொடங்குகிறார், இடபம் காலை மடக்கிப் படுத்திருக்கும்போது ங போன்று இருப்பதை உணர்ந்து நமக்கும் அறிவிக்கின்றார். மேலும் அற உருவாகிய இடபம் இல்லாதார்க்கு உதவும் குறிப்பினது என்பதையும் உணர்த்துகிறார். 'நல்ல நெஞ்சமே நீ ஙகரம் போன்ற இடபத்தைக் கொடியாகக் கொண்ட சிவெருமானை உய்வதற்குரியவனாகக் கொள்வாயானால் அதுவே உனக்குச் சிறந்த புகலிடமாகும். அச்சிவன் மகரவெல்கொடியானாகிய மன்மதனைக் காய்ந்தவன். காய்தவனைப் புகலாகக் கொள்வதே உன் உய்விற்கும் உயர்விற்கும் சிறந்தவழி' என்கின்றார். அப்பாடல் காண்க | ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில் மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகரில் சேவடி யேபுக லாகுமே. | | -தி.5.ப.97.பா.16 | பாவமும் பழியும்: | பெரும்பாலான மக்கள் பாவம் செய்வதற்கு அஞ்சவதில்லை, அதனால் வரும் பழிக்குத்தான் அஞ்சுகின்றனர். பாவநாசத்திருக்குறுந்தொகைப் பதிகத்து முதல் பாடலில் பாவமும், பழியும் பற்றற வேண்டுமானால் நம் காவலனாக உள்ள பெருமானை நினைமின்கள், நினையின் அருள்புரிவான் என்கிறார், மற்றப் பாடல்களில் இறையுணர்வில்லாது சடங்காகச் செய்யும் திர்த்தமாடல், வழிபாடு செய்தல், வேதம் ஓதல், குருக்களாய் உபதேசித்தல் முதலியன பயன்தராது என்கிறார். அவற்றுள் ஒருபாடல் காண்போம். | கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே | | -தி.5 ப,99 பா,9 | | |
|
|