38 | ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை | (ஐந்தாம் திருமுறை) | |
| கயவக்கணம்: | கயவர் - கீழ்மக்கள். இவர்களைப் பற்றித் திருவள்ளுவர் இரண்டு குறள்களில் குறிப்பிடுகிறார். கயவர்கள் என்றால் அவர்கட்கென்று அடையாளங்கள் ஏதும் இல்லை. இருப்பதாக எண்ணி ஏமாந்துவிடாதீர்கள். அக்கயவர்களும் மக்களே போன்றிருப்பர் என்பதனை "மக்களே போல்வர் கயவர்" என்றும், மேலும், மக்களிலும் உயர்ந்த தேவர்களைப் போன்றும் இருப்பர், இதனைத்தான் "தேவர் அனையர் கயவர்" என்றும் கூறியுள்ளார். | இவர்கள் இறைவனின் பெருந்தன்மையை உணரார்கள் என்று அறிவித்து இத்திருமுறையை அப்பர் நிறைவு செய்கிறார். இத்திருமுறைத் தொடக்கத்தில் அன்னம்பாலிக்கும் என்று முத்திப் பேற்றை விரும்பும் பெரியோர்களைப் பற்றி அறிவித்தார். இறுதியில் என்னதான், பேரின்பம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது அதை அனுபவிக்கச் சேரவாரும் ஜெகத்தீரே என்று அழைப்பு விடுத்தாலும், கயவர் என்றுமே வாரார். அதுகொண்டு பெருமான் அருள் இல்லை என்று மயங்காதீர் என்று அறிவுறுத்தி நிறைவு செய்கிறார். கயமை அகற்றி நயனைப் பற்றி நலமுடன் வாழ அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம். | கல் மனம் அகற்றி, நல் மனம் பெறுவோம். | | |
|
|