(ஐந்தாம் திருமுறை) | பதிப்புரை | 39 | |
| உ சிவமயம் | பதிப்புரை | திருநா வுக கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். | | -சேக்கிழார் | மலர்தலை உலகின்கண் மன்னிய இருளை அகற்றி, இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பன்னிரு பகலவர்களைப்போல, மக்கள் அக இருள் போக்கும் அருமணிச் சுடர்களாய் இலங்குவன, பன்னிரு திருமுறைகள். அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்பெயர் பெறும். இவற்றை அருளிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் மூவர் முதலிகள் எனப் பெறுவர். | பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் அருளியன. நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் நாவுக்கரசர் அருளியன. ஏழாம் திருமுறை சுந்தரர் அருளியது. | தமிழ் மொழியில் அமைந்த வேதங்களாக இவை போற்றப்பெறும். வேதங்களில் நான்காவதாகிய அதர்வண வேதம் ஏனைய மூன்றனுள் அடங்கியிருத்தலால், வேதம் மூன்றே என ஸ்மிருதிகள் கூறும். அம்மூன்றனுள் நடுவில் உள்ளது யசுர் வேதம். இவ்வேதத்தின் நடுவில் சதருத்ரீயத்தின் நடு நாயகமாகத் திருவைந்தெழுத்து விளங்குகின்றது. | மூவர் அருளிய தமிழ் வேதமாகிய தேவாரமும் மூன்று வேதங்களாக விளங்குவன. அப்பர் அருளிய திருமுறை மூன்றனுள், நடுவணதாகிய, யசுர் வேதம் போல விளங்கும் ஐந்தாம் திருமுறை, நூறு பதிகங்களைக் கொண்டது. அதன் நடுவே விளங்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகம் பதினொரு பாடல்களை உடையது. இத்திருப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடலில் முத்தி பஞ்சாக்ஷரம் போற்றப் பெற்றிருக்கின்றது எனப் பலரும் எடுத்துக்காட்டி, தேவாரத் | | |
|
|