திருமுறையைத் தமிழ் வேதம் என மொழியக் காணலாம். |
அத்திருப்பாடல், |
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும் மண்ணி னார்மற வாதுசி வாயஎன் றெண்ணி னார்க்கிட மாஎழில் வானகம் பண்ணி னாரவர் பாலைத் துறையரே | |
-தி.5ப.51பா.6 |
என்பதாகும். |
இனிமையும், எளிமையும் கருத்தாழமும் உடைய இத்திருமுறைப் பாடல்கள் பலராலும் பயிலப் பெறுபவை. |
இத்திருமுறையில் 1015 பாடல்களைக் கொண்ட 100 பதிகங்கள் அடங்கியுள்ளன. 88 பதிகங்கள் தலங்களைப் பற்றியவை. 12 பதிகங்கள் பொதுவானவை. |
அவை தனிக்குறுந்தொகை - 3, காலபாசத் திருக்குறுந்தொகை-1, மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை-1, தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை-1, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை-1, மனத்தொகை-1, உள்ளத்தொகை-1, சித்தத்தொகை-1, பாவநாசத் திருக்குறுந்தொகை-1, ஆதிபுராணத் திருக்குறுந்தொகை-1 என்ற பெயர்களால் வழங்கப்பெறும். |
குறுந்தொகை என்பது யாப்பிற்குரிய பெயராகும். குறுகிய பாவினமாகிய கலிவிருத்த யாப்பில் இவை அமைந்துள்ளன. |
இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்களாக உள்ளவை: -திருமறைக்காட்டில் மறைக்கதவம் திறக்கப் பாடியது. -நீற்றறை குளிரப் பாடியது. -வாய்மூருக்கு வரப்பணித்த இறைவரைப் பாடியது, -பழை யாறை வடதளியில் சமணரால் மறைக்கப்பட்ட சிவலிங்கக் காட்சியைக் காணப் பாடியது, ஆகியனவாம். |
இத்திருமுறையில் விளங்கும் காலபாசத் திருக்குறுந்தொகை மகா மிருத்யுஞ்சய மந்திரமாக விளங்குவது. |
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை திருமால், பிரமர் அடிமுடி தேடி அயர்த்துத் தொழுதபோது பெருமான் சிவலிங்கமாக |