பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)பதிப்புரை41

வெளிப்பட்ட நிலையைத் தெரிவிப்பது.
     தனித்திருக் குறுந்தொகையுள் 89ஆவது திருப்பதிகம் ஒன்று முதல் பத்து எண்கள் தொடர்ந்து வர இறைவன் புகழை எடுத்தியம்புகிறது. சித்தத்தொகை என்னும் 97 ஆவது திருப்பதிகம், ஆத்திசூடிபோல, தமிழ் எழுத்தின் வரிசையமைப்பைப் பாடிய முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.
     இனிய எளிய சொற்களால் உயர் நெறிகளை மக்கட்கு உபதேசிக்கும் இத்திருமுறையை எல்லோரும் விரும்பிப் பயிலக் காணலாம்.
ஐய னேஅர னேயென் றரற்றினால்
உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.

-தி.5ப.60பா.7

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

-தி.5ப.91பா.6

நன்று நாள்தொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

-தி.5ப.42பா.1

ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்.
ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.

-தி.5ப.60பா.1

பூவ னூர்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.

-தி.5ப.91பா.6

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினைகெடும் மெய்மையே