இப்பாட்டின் அமைப்பாலும் சிறப்பாலும் அப்பர்
அருளிய குறுந்தொகைப் பாடல்களில் ஒன்றாக இப்பாடல் இருத்தல் வேண்டும் என ஆய்வு
அறிஞர்கள் உணர்த்தியுள்ளனர். |
இத்தகைய பாடல்களின் தொகுப்பாய்
இலங்கும் ஐந்தாம் திருமுறை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் அருளாணை வழியே
தருமை ஆதீனப் புலவர் திரு. க. வச்சிரவேலு முதலியார் மேற்பார்வையில் ஆதீனப்
புலவர்களாகிய டாக்டர். திரு. சொ. சிங்காரவேலன், வித்துவான் திரு. வி. சா.
குருசாமி தேசிகர் ஆகியோர் எழுதிய பொழிப்புரை, குறிப்புரைகளோடு கூடியதாய்
1961 ஆவது ஆண்டு வெளியிடப்பெற்றது. |
இதுபோது இவ்வைந்தாம் திருமுறை,
சிதம்பரம் திரு. திருநாவுக்கரசுப் பிள்ளை, திருமதி சிவகாம சுந்தரி ஆகியோர்
நன்கொடையால் ஒளியச்சில் வெளிவருகின்றது. |
இத்திருமுறைப் பதிப்புக்களைச்
செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம்
காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள்
ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார். |
அன்பர்கள் ஓதி உணர்ந்து பயன்
எய்துவார்களாக.
|
தருமை ஆதீனம்
10.12.1996 |
இங்ஙனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் உத்தரவுப்படி,
குமாரசாமித்தம்பிரான்
(காறுபாறு, ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள்)
| |