பக்கம் எண் :

44முதல் பதிப்பின் மதிப்புரை(ஐந்தாம் திருமுறை)


சிவமயம்

முதல் பதிப்பின் மதிப்புரை

எம். எஸ். சாரங்கபாணி முதலியார் பி.ஏ.,பி.எல்.
 ஆணையர்.இந்து சமய அறநிலைய (ஆட்சித்) துறை சென்னை.
     "சொற்குறுதி அப்பர் எனச் சொல்" என்பது முதியோர் வாக்கு. அப்பரது அருள் மொழிகள் அனுபவம் வாய்ந்தவை. உலகத்தின் உண்மை உணர்வுகளைக்கண்டு அல்லலுற்று உய்ந்த பெருமான் இவர். எண்பத்தோராண்டு இவ்வுலகில் வாழ்ந்தார்.
     சைவ சமயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டின் சிறப்பு அளவிடற்கரியது. இப்பெரியாரும் திருஞானசம்பந்தரும் வாழ்ந்து வந்த காலத்தில் சைவ சமய உண்மைகளை வெளிப்படச் சொல்லும் மடங்கள் அல்லது நூல்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஓரளவு பெயரளவில் வழிபாடும் நம்பிக்கையும் மட்டும் மக்களிடையே நிலவி இருத்தல் கூடும் என்று ஊகிக்கலாம். அவை பேரறிவு படைத்த அப்பர் பெருமானுக்கு ஆராய்ச்சி செய்தற்குத் தக்க துணையாக அமையவில்லை.
     எனவேதான் அவர் தம் அறிவினால் சமய உண்மைகளை ஆராயத்தொடங்கி, சமண சமய மடங்களுக்குச் சென்று அச்சமயநூல்களை ஆராய்ந்து, தாம்கண்ட உண்மைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லி, சமணசமயத்தை வளர்க்கலானார். ஆகவே தருமசேனர் எனப் பட்டமும் பெற்றார்.
     இந்நிலையில் அவரது தமக்கையார் திலகவதி அம்மையார் இறைவனிடத்தில் முறையிட, திருவதிகைப் பெருமான் சூலைநோயைத் திருநாவுக்கரசர்பால் ஏவி, தேவாரமாகிய தமிழ் மந்திரத்தால் அது நீக்கப்பெற்றது. அன்றே தாம் பெற்ற அநுபவத்தின் பயனாக இப் பெரியார் மீண்டும் சைவ சமயமே உயர்வுடையது என்று கண்டு அதுமுதல் சைவசித்தாந்தத்தின் உண்மைகள் பொதியப்பெற்ற