48 | முதல் பதிப்பின் முகவுரை | (ஐந்தாம் திருமுறை) | |
| கல்லூரி முதல்வராக இலங்கும் செஞ்சொற் கொண்டல், வித்துவான், திரு. சொ. சிங்காரவேலன் எம்.ஏ., | அவ்வாறே பதிக வரலாறு தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், வித்துவான், சிரோமணி, திரு. வி. சபேசனாலும், தல வரலாற்றுக் குறிப்புக்கள், கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர், வித்துவான், திரு.வை. சுந்தரேச வாண்டையாராலும் எழுதப் பெற்றுள்ளன. | இவ்வுரைப் பகுதியினைத் தம் அறிவு நலத்தால் ஆய்ந்து உரைச்சிறப்பு எழுதியுள்ளவர் தருமை ஆதீனப் புலவர் சித்தாந்தக் கலைமணி வித்துவான், திரு.சி. அருணைவடிவேலு முதலியார் ஆவர். | ஐந்தாம் திருமுறை உரை முதலியவற்றை மீளநோக்கி ஆராயும் வாய்ப்பு ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்கள் அருளாணையால் அடியேனுக்கு எய்திற்று. உரைப் பகுதிகள் அனைத்தையும் கண்டு செப்பமுறத் தொகுத்து நோக்கும் திருவருள் வாய்ப்பு அடியேனுக்கு வாய்த்தது குருவருள் விளக்கத்தாலே ஆதலின், ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் திருவடிகளில் மன மொழி மெய்களாலாகிய என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். | ஏனைய திருமுறைகளும் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்கள் திருவுளப்படி விரைவில் உரையுடன் வெளிவர இருக்கின்றன. எல்லாம் குருவருள் வளம். | திருநாவுக்கரசர் திருவடி வாழ்க!
|
தருமை ஆதீனம்
25.05.1962 |
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானத்தின் அருளாணைப்படி,
க. வச்சிரவேல் முதலியார்,
தலைமை ஆசிரியர்,
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி,
காஞ்சிபுரம். |
| | |
|
|