(ஐந்தாம் திருமுறை) | ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை | 5 | |
| தொழத்தக்கவன்: | "சிவ ஏகோத்தியேயகா" என்பது உபநிடத வாக்கியம். சிவபெருமான் ஒருவனே தியானிக்கத் தக்கவன் என்பது இதன்பொருள். தியானிக்கத் தக்கவன் சிவனே என்றால் தொழத்தக்கவனும் அவனே என்பது சொல்லாமலே விளங்கும். அக்கருத்தையே அப்பர், திருநெல்வாயிலரத்துறைத் திருக்குறுந்தொகைப் பதிகத்தின் (தி.5ப. 3பா. 1-10) ஒவ்வொரு பாடலிறுதியிலும்" அரத் துறைமேவிய, சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே. சுரும்பு ஒப்பானை, கரும்பு ஒப்பானை, சுரப்பு ஒப்பானை, கை ஒப்பானை, கதி ஒப்பானை, கனல் ஒப்பானை, தன் ஒப்பானை, ஊழியானை, நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே" என்று நாம் தொழுவது சிவபரம்பொருளையே. அவனையே தொழுது உய்மின்கள் என்று மன்பதைகளுக்கு அறிவுறுத்துகிறார். | நினைத்தால் முத்தி தரும் தலம்: | நினைத்தால் முத்தி தரும் தலம் திருஅண்ணாமலை, "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்" திருவண்ணாமலை என்கிறார் ஞானசம்பந்தர் | அப்பர் தில்லைப் பெருமானை மறந்து உய்வனோ என்று பாடியவாறே அண்ணாமலைப் பெருமானையும் "இகழ்ந்தார் புரம் மூன்றையும் அட்டனை, ஆனனை, அத்தனை, ஆற்றனை, அன்னனை, ஆரனை, அருவனை, அருத்தனை, என் உடல் உறுநோய்களைத் துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ என்கிறார். மறந்தார்க்குக் கதியில்லை. மறவாதே நினைந்தார்க்குத் தீங்குறும் விதியில்லை. எனவே அண்ணாமலையானை நினைவோம். கண்ணாரக் கண்டு தொழுவோம். | எந்த மாதவம் செய்தனை: | திருவாரூர்ப் பெருமானைத் தொழுத திருநாவுக்கரசர், நெஞ்சைப் பாரத்துக் கேட்கிறார். பிறவி எடுத்துழலும் பெத்த காலத்தும், பிறவியற்ற முத்திக் காலத்தும் நம்முடனே மறைந்திருந்தே நலம் செய்பவன் ஆரூர் அரநெறிப் பெருமான். அவன் விளக்கமாக நம் சிந்தையுள்ளும், சிரத்துள்ளும் தங்குதற்கு நாம் எந்த அளவு தவம் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும், பெருமான் நமது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கியிருப்பதைச் சிறப்பாக உணர்ந்தவர்கள் தவம் செய்தவர்கள். அங்ஙனம் தவம் செய்யாதவர்களும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம். என்ன தவம் செய்தாய், செய்தால் அல்லவா இறைவன் நம் உள்ளத்தும் சிரத்தும் | | |
|
|