பக்கம் எண் :

6ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

எழுந்தருள்வான்? என்று வினாவாகவும் அமைகிறது. இப்பாடல். அது வருமாறு.
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்தம் இல்புகழ் ஆரூர் அரநெறி
சிந்தை யுள்ளும் சிரத்துளும் தங்கவே

-தி. 5ப. 7பா. 2

இதே கருத்துள்ள, அப்பரின் திருச்சேறைத் திருக்குறுந்தொகைப் பாடலைக் கண்டு மகிழ்வோமாக.
என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே

-தி.5ப.77பா.2

அம்மையாரைத் தந்தார்:
     எம்மையராகிய தாய் தந்தையார் (இரு முது குரவர்) இலராயினர். யானும் வழி அறியாதவனாயினேன். இந்த நேரத்தில் எனக்கு அன்னை (எம்மையராக)யாக உறுதுணையாய் நின்றவர் உடன்பிறந்த திலகவதியம்மையார். அம்மையார் நமக்கு யார் என்று நைந்து அரற்றி நிற்பேனுக்குத் திலகவதியாராகிய அம்மையாரைப் பெருமான் எனக்குத் தந்தருளினார். இளமையில் அவரது சொல்லைக் கேளாது போயினும், தாயுள்ளம் படைத்த தமக்கையாரின் தவம்தான் என்னைக் கரையேற்றியது என்று நன்றியுணர்வோடு பாடுகிறார். அப்பாடல் காண்க.
எம்மை யாரிலை யானும் உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யார்? எனக்கு என்றென் றரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார் ஆரூர் ஐயரே

-தி. 5ப. 7பா. 6

இட்டமாக இருக்கும் இடம்:

     திருமறைக்காட்டை விரும்பி உறையும் இடமாகக் கொண்டுள்ளார் சிவபெருமான். இங்குள்ள பெருமான் அஷ்ட புஷ்பம் என்னும் எண்மலர்களை வட்டமாகச் சுற்றிய சடைமிசைச் சூடியுள்ளார்என்கிறார். எண் மலர்களாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோத்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். இவ்வெட்டு மலர்களும் புறப்பூசையில் வழிபடற்கு உரியன. அகப்பூசைக்கு உரிய எண் மலரையும் நாம் தெரிந்து வழிபடல் நன்மை தருவதாம். அவையாவன: கொல்லாமை, அருள், பொறிஅடக்கல், பொறை,