பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு51

மூவர்க்கும் தமிழுலகமும், சைவ உலகமும் எஞ்ஞான்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடு உடையவாம்.
அருந்தொடர்கள்:
     "திருநாவுக்கரசரது தேவாரம் புலவர்களால் எளிதிற்பொருள் காண இயலாதது" என்பதற்குக் காட்டாக ஒன்று இரண்டை இவ் ஐந்தாந் திருமுறையினின்று எடுத்துக் கூறலாம்.
     முதற்றிருப்பதிகத்துள் முதற்றிருப்பாடலிற்றானே, "என்னம் பாலிக்கு மாறுகண்டின்புற" என ஒரு தொடர்வந்துள்ளது. அதில் 'என்னம் பாலிக்குமாறு' என்னுந்தொடர் எளிதில் பொருள் விளங்குவது அன்று.
    அதன் இரண்டாவது திருப்பாடலில், "அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டு", "கரும்பற்றச்சிலைக் காமன்" என்னுந்தொடர்கள் காணப்படுகின்றன. அவற்றுள்ளும் 'அரும்பற்றப்பட', 'கரும்பற்றச் சிலை' என்னும் பகுதிகள் அத்தன்மையன.
அருஞ்சொற்கள்:
     இன்னும் மூன்றாவது திருப்பதிகத்துள் மூன்றாவது திருப்பாடல்,
"பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாம் தொழுவதே"
     என்பது. இதனுள். 'இரப்பு, அரப்பு, சுரப்பு, என்னும் சொற்களின் பொருள் இன்ன என ஒருதலையாகத் துணிதல் எத்துணை உழைப்பைத் தருவது, இவற்றிற்கெல்லாம் பொருத்தமான பொருள்கள் இவ்வுரையுட் கண்டு கூறப்பட்டுள்ளன.
     மற்றும் இத்திருமுறையுட் காணப்படும் அருஞ்சொற்கள் சில; அவை'கறும்பி, சரக்க, சீரம், சுபத்தர், சுவண்டர், தவனி, தனகு, பாழிமை, மொண்ணை, முதலியன. இவை பிறவிடங்களிற் காண்டற்கரியன. இவற்றிற்கு முறையே, 'துன்புறுத்தி, விரைவாக, சீரணம், நலஞ்சான்ற சிந்தையர், திருவெண்ணீறணிந்தவர், தபிக்கப்பட்டவள், உள்ளக்களிப்பு, உறைப்பு, முரண்டல்' எனப்