பக்கம் எண் :

52ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு(ஐந்தாம் திருமுறை)

பொருள் கூறப்பட்டுள்ளன. (தி.5.ப.74.பா.6.) (ப.10.பா.11) (ப.82.பா.10) (ப.7.பா.4) (ப.10.பா.3) (ப.7.பா.8) (ப.92.பா.1) (ப.18.பா.2) (ப.15.பா.5)
       "இராவ ணஞ்செய மாமதி பற்றவை
யிராவ ணம்முடை யான்றனை யுள்குறின்
இராவ ணன்றிரு வெண்கா டடைமினே"
 

(தி.5.ப.49.பா.11)

என்னும் திருப்பாடல் 'மடக்கு' அல்லது 'யமகம்' என்னும் முறையில் அமைந்து, பொருள் விளங்குதல் அரிதாய் இருத்தல் தெளிவு. இதன் நான்கு அடிகளிலும் முதற்கண் வந்துள்ள மடக்குச் சொற்களுக்கு முறையே, 'இல்லாதபடி, ஐராவணம், இராவணன், கரிய நிறமுடையவன் (அகோரமுகத்தினன்)' எனப் பொருளுரைத்துத் தெளிவுபடுத்தியிருத்தல் அறிந்து இன்புறத்தக்கது.
பொருள்கோள் திறன்:
பொருள் முடிவு காணுதல் அரியனவாய் உள்ள பல இடங்களுக்கு அறிஞர்கள் வியக்கும்படி பொருள் கண்டிருத்தல் உரையாசிரியரது பொருள்கொள்ளுந் திறனை நன்கு புலப்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக,
"கட்டி யொக்கும் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்"
என்பதன் உரையில் (தி.5.ப.5.பா.6) 'துணி வெட்டி - வீணையை மீட்டும்போது ஓசையைத் துணித்தும் நரம்பை வெட்டியும்' என உரைத்திருத்தல்,
"கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்" என்பதில், (தி.5.ப.5.பா.7) 'கோணிக்கொண்டை - சேர்த்துக்கட்டிய சடைக்கொண்டை' எனக் குறித்திருத்தல்,
"குறைக்காட்டான்" (இராவணன்) என்பதற்கு, (தி.5.ப.9.பா.9) 'குறைக்கு ஆள்தான்' எனப் பிரித்து, 'குற்றங்களுக்கு' ஆளாய் இருப்பவன் எனினும் அமையும் என்று எழுதியிருத்தல்.
"மலையின் நீடிருக்கும்மறைக் காடரோ" என்பதில், (தி.5.