ப.10.பா.5) 'மலையின் நீடு இருக்கும் மறைக்காடு - திருக்கயிலை ஊழிகளில் அழியாதுநிற்றல்போலத் தானும் அழியாது நீடுதலாக இருக்கும் மறைக்காடு' எனப் பொருள் விரித்திருத்தல். |
மாடத்தாடு மனத்துடன் வைத்தவர் - (மாடத்தும்) விண்ணிழிவிமானமாகிய புறத்தும், (ஆடும் மனத்தும்) நிலையாது திரியும் மனத்தும் (அகத்தும்) வழிபட்ட திருமால், கோடத்தார் - வேதகோஷம் செய்யும் பிரமன், பாடத்தார் - மூலபாடம் பேணும் 'அந்தணர்' என உரைகண்டிருத்தல்,(தி.5.ப.12.பா.4-கு-ரை) |
"மங்கை காணக் கொடார்மண மாலையை" |
என்னும் திருப்பாடலுள் (தி.5.ப.15.பா.6) "எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே" என்பதில் 'இதழி' என்பதற்குக் கொன்றை என்னாது 'கொன்றை போலும் பசலை' என்று உரைத்திருத்தல், |
"கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பல பத்தர்கள்" | |
என்பதில் (தி.5.ப.23.பா.1) 'குறைவிலைப் படுங்கண் ஒன்றிலராய் - குறைந்த விலைக்கு விற்றுக்கொள்வதோர் இடமும் இல்லாதவராய்' என்றுரைத்து, 'விற்றூணொன்றில்லாத நல்கூர்ந்தான்காண்' என மேற்கோள் காட்டியிருத்தல், |
எட்டு மலர்கள் (அட்ட புட்பங்கள்) இட்டு வழிபடுதலையே கூறிவரும் திருப்பதிகத்துள், "ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்" என்பதில், (தி.5.ப.54.பா.6) 'ஏழி' என்பதற்கு, 'ஏழை முன்னாக உடையது; எட்டு' என்று கூறியிருத்தல், |
"நஞ்ச நெஞ்சர்க் கருளும்நள் ளாறரே" என்பதில் 'நஞ்ச - நைந்த; நைஞ்ச என்றாய், நஞ்சஎன மருவியது' எனக் குறிப்புத் தந்திருத்தல், |
"ஙகர வெல்கொடியான்" என்பதற்கு, (தி.5.ப.97.பா.16) 'இடபம் ங போன்றிருத்தலின், ஙகரவெல்கொடியான் என்றார்' எனக் கூறியிருத்தல், |
இன்னோரன்ன பல இடங்கள் வியப்பிற்கும், பாராட்டிற்கும் உரியனவாய் விளங்குகின்றன. |