பக்கம் எண் :

578திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1618,
உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
7
1619.
ஓலி வண்டறை யொண்மல ரெட்டினால்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீரட்டரே.
8

     கு-ரை: ஏழி-ஏழை முன்னாக உடையது எட்டு தொன்மலர்-தொன்மையாகச் சொல்லப்பட்ட மலர். ஊழி - பல பிறப்புக்கள். பாழி - வலிமை.
     7. பொ-ரை: மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும், நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர்.
     கு-ரை: உரைசெய் நூல்வழி - உரைக்கப்பட்ட சிவாகம நூல் முறைப்படி. ஒண்மலர் - விளக்கமான மலர்கள். திசைகள் போல்வரு-அலைகளைப் போலச் சிறிதும் பெரிதுமாய்த் தொடர்ந்து வரும். வரைகள்-மலைகள். விரைகள்-மணப்பொருள்கள்.
     8.பொ-ரை: மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும், வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தே வந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர்.
     கு-ரை: ஒலிவண்டறை- ஓலமிடுவதாகிய வண்டுகள் ஒலிக்கின்ற. காலை-காலையிலே. ஆல் அசை. ஆலி-ஒலித்து. கூடிவேலி சூழ்ந்து-வேலிபோலச் சூழ்ந்து.