திருமேனியும் உடையவராயினும், நஞ்சைஅள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும். கு-ரை: புள்ளிகொண்ட-புள்ளிகளைக்கொண்ட. புலியுரி-புலித்தோல். வெள்ளி கொண்ட வெண்பூதி-வெள்ளியின் நிறத்தைக் கொண்ட வெண்மையான விபூதி. நள்ளி-விரும்புபவன் ஆகிய நாரை யூரான் என்க. 3, பொ-ரை: நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும். கு-ரை: வேடு- வேடர் வடிவம். பலியுண் கொள்கை என்க. கொள்கை-செயல். நாடு தங்கிய-நாட்டின்கண் பொருந்திய. 4. பொ-ரை: திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண்தலைமாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: தூவல்-தூவி; இறகு. கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன். கூவிளங்கண்ணி- வில்வமாலை. மிக்க- பலவாய. நக்கன்-நிர்வாணி. அக்கின் ஆரம்-என்பு மாலை. |