5. பொ-ரை: வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும், திருநீற்று வெண்பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும், ஒரு பங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு, மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: வடிகொள்- உலையில் வடித்தெடுத்தாற் போன்று கூரிய. பொடி-திருநீறு. நடிகொள் -நடித்தலைக் கொண்ட. நடி- முதனிலைத் தொழிற்பெயர். வடிவு அம்ம அழகிது என்க. 6. பொ-ரை: உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர், நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும், பால், நெய், தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும், ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: மல்கிய-பொருந்திய; சுடரொடு-நெருப்போடு. ஞாலம் மல்கிய-உலகில் புகழால் நிறைந்த. ஆலநீழல்-கல்லாலநிழல். 7. பொ-ரை: இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும், ஆடுதலும், நல்ல எண்ணமில்லாத தீயோர்களது |