பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)55.திருநாரையூர்583

1629,
என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது வம்ம வழகிதே.
8
1630.
முரலுங் கின்னர மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுலாம்
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக்
கரவும் பூணுத லம்ம வழகிதே.
9

முப்புரங்களை எரித்தலும், தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம்.
     கு-ரை: பண்ணினால்-இசையினாலே. மறை பாடுதலோடு என்க. எண்ணிலார்-பகைவர்.
     8.. பொ-ரை: எலும்புகளைப் பூண்டு, எருதின்மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே.
     கு-ரை: மின்புரிந்த-மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய. நன்பகல்- நல்ல பகற்போது. பலிதேரினும்-உணவு இரந்தாலும். அன்பன்-அன்பே வடிவமாயவன்.
     9. பொ-ரை: ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.
     கு-ரை: முரலும்-இனிய ஓசையோடு ஒலிக்கும். கின்னரம்- ஒருவகை வாத்தியம். மொந்தை-தோற்பறை. நரலும்-ஆரவாரிக்கும். வாரி-கடலால் சூழப்பட்ட உலகின்கண் பொருந்திய எனக் கூட்டுக.