| திருநாவுக்கரசர் புராணம் அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்வணங்கி அருள்முன் பெற்றுப், பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங் கொண்டு போந்தே, எப்புவனங் களும்நிறைந், திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச், செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்ப்பணிந்து பாடிச் செல்வார். -தி.12.சேக்கிழார். |