பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)56.திருக்கோளிலி585

56. திருக்கோளிலி

பதிக வரலாறு:
     திருநாவுக்கரசர் திருவீழிமிழலையையும் திருவாஞ்சியத்தையும் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் வணங்கித் திருமறைக் காட்டிற்குச் செல்லும் பொழுது திருக்கோளிலியப்பரை வணங்கிப் பாடியது இத்தமிழ்மாலை.

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:169

பதிக எண்:56

திருச்சிற்றம்பலம்

1632.
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

1

1633,
முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்


     1, பொ-ரை: மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும், மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும், செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும், மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம்வினைகள் நாசமாம்.
     கு-ரை: மைக்கொள் கண்-கருமை நிறத்தைக்கொண்ட கண்கள். மையுண்ட கண் எனினும் பொருந்தும். மான், மழு இவை பொருந்திய கையையுடையன் என்க. செய்யதோர் சோதியன்-சிவந்த பேராளியாகிய வடிவினன். கொக்கு அமர்-கொக்குக்கள் தங்கிய மாமரம் எனினும் அமையும். நக்கன்-நிருவாண கோலத்தை உடையவன், நாசம் -நாசம் ஆம்; அழியும்.
     2, பொ-ரை: முத்தினைப் போல்வானும், உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும், வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும், பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில்