பக்கம் எண் :

586திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.
2
1634.
வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
3
1635.
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களு மொண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.
4

உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும்.
     கு-ரை:முத்தினை-முத்துப்போன்றவனை. முதலாகிய-முதற் பொருளாகிய. வித்தினை-உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை. விளைவாய விகிர்தனை-உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை. விகிர்தன்-ஒன்றோடொன்று ஒவ்வாத போக, யோக, கோர வடிவங்களை உடையவன். அல்லல்-துன்பம். முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார். இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார்.
     3. பொ-ரை: வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் நெஞ்சு கலந்து பொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும், மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
     கு-ரை: வெண்டிரைப்பரவை -வெள்ளிய அலைகளோடு கூடிய கடல். கண்டனை- கழுத்தை உடையவனை கலந்தார் தமக்கு- அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு("கலந்த அன்பாகி" தி.8 திருவாசகம்.) கொண்டலம் பொழில்-மேகங்கள் சூழ்ந்த பொழில். அண்டனை-எல்லா உலகமுமாயவனை.
     4. பொ-ரை: வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால், கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும்,