பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)56.திருக்கோளிலி587

1636.
அல்ல லாயின தீரு மழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.
5
1637.
ஆவின் பால்கண் டளவி லருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.
6

குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து பொழுவீராக! 'தொழுவார்க்கன்றி வினை நீங்கா' என்பது கருத்து.
     கு-ரை: வல்வினை பலவும் என மாறுக. பாறும்-அழியும். பரிசினால்-தன்மையினால். உலவும்-பரவும். குலவினான்-விளங்க அணிந்தவன். நித்தல்-நாடோறும்.
     5. பொ-ரை: அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும், கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக; உம் அல்லலாயின அனைத்தும் தீரும். 'அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்று' என்றபடி.
     கு-ரை: அல்லல் -துன்பம். முல்லை வெண்முறுவல்-முல்லை போலும் வெள்ளிய பற்கள். கொல்லை -தினைப்புனம். குறிஞ்சிக் கருப்பொருள் என்றபடி. இது இன அடை. யானை -கயாசுரன் வீடுமே, ஏகாரம் தேற்றம்.
     6, பொ-ரை: பசுவின் பாலை முன் உண்டமையால், மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப் பால் வேண்டலும், 'செல்க' என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில்களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும். 'பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ' குறித்தபடி.