பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)56.திருக்கோளிலி589

1640.
கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி யீசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.
9
1641.
மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னு மிரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.
10

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: மாலதாகி - உலகப் பொருள்களில் மயக்கத்தைப் பொருந்தினவராகி. காலம் வந்து கடைமுடியாமுனம் - இறத்தற்கு உரிய காலம் வந்து இறுதியாக உம் வாழ்வை முடித்தற்கு முன். கோலம் - அழகிய. வார் - நீண்ட.
     9. பொ-ரை: கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி, நீர் திரியாது, திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம்.
     கு-ரை: கேடுமூடி - துன்பமே மிகுதியாய்ப் பரவி. கிடந்துண்ணும் - செய்வதொன்றின்றித் துன்பமே நுகரும். உலகீர், நாடே தேடித் திரிகின்றீர்; அது செய்யாது இறைவனை இரவும் பகலும் பாடுமின். சிவகதி - (சிவஞானமாகிய நெறி) சேரலாம் என்றபடி.
     10. பொ-ரை: செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும். 'பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான்' என்பது குறிப்பு.
     கு-ரை: மடுத்து -தான் என்னும் செருக்கை உட்கொண்டு. மா - சிறப்பிற்குரிய. மேலைவினைகள் - பழவினைகள். விடுத்து - நம்மை விட்டு; வினைகள் நீங்கிடும் என்க. மடுத்து - என்பதற்குரிய செயப் படு பொருள் அவாய் நிலையான் வந்தது.