பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)59.திருமாற்பேறு607

1666.
வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.

5

1667.
பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.

6

1668.
மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்

கூட்டுக. காதல் - அன்பு. கருத்தினில் நின்ற - கருத்தோடு நின்ற. பயில் - வாழ்கின்ற. போதுமின் - வாருங்கள்.
     5. பொ-ரை: கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும், இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர்.
     கு-ரை: வார்கொள் - கச்சணிந்த. வார்கொள்நன்முரசும் - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முரசம். அறை - வண்டுகள் ஒலிக்கும். வார்கொள் - நீண்ட பொழில். மன்னுவர் - நிலைபெறுவர்.
     6. பொ-ரை: பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக; ஒளிகிளர்கின்றதும், வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற்பேறு கண்டு கைதொழக்கவலைகள் தீரும்.
     கு-ரை: பண்டை வல்வினை - பழைய வலிமையான வினை - சஞ்சிதம். பற்றறுத்தல் - முற்றிலும் நீக்குதல். ஒளிகிளர் - ஒளி விளங்கும்.
     7. பொ-ரை: மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து