வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு தொழவ லார்தமக் கில்லை துயரமே. | |
| 7 |
1669. முன்ன வன்னுல குக்கு முழுமணிப் பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம் மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும் அன்ன வரெமை யாளுடை யார்களே. | |
| 8 |
1670. வேட னாய்விச யன்னொடும் எய்துவெம் காடு நீடுகந் தாடிய கண்ணுதல் மாட நீடுய ருந்திரு மாற்பேறு பாடு வார்பெறு வார்பர லோகமே. | |
| 9 |
|
| இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை. |
| கு-ரை: மழுவலான் - மழுவாயுதத்தை வலக்கரத்தே ஏந்தியவன். திருநாமம் - திருவைந்தெழுத்து. வழுவில் - குற்றமில்லாத. அன்பு செய்து அழவலார்களுக்கு, இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் என்க. |
| 8. பொ-ரை: உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள். |
| கு-ரை: உலகுக்கு முன்னவன் என்க. முழுமணிப் பொன்னவன் - முழுமணி போன்றவன் பொன் போன்றவன் என்க. போகமாம் மன்னவன் - போகத்தைச் செய்பவனாகியும் போகப் பொருளாகியும் நிற்கும் தலைவன். |
| 9. பொ-ரை: அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள். |