1671. கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் தருக்கி னாலெடுத் தானைத் தகரவே வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| கு-ரை: விசயன் - அருச்சுனன். வெம்காடு - இடுகாடு. நீடுஉகந்து - பெரிதும் விரும்பி. பரலோகம் - மேலான உலகம். |
| 10. பொ-ரை: கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை. |
| கு-ரை: கருத்தனாய் - தானே தலைவன் என்ற எண்ணமுடையவனாய். தருக்கினால் - ஆணவத்தால். தகர - அழிய. ஆர் அருள் - அரிய திருவருள். அருத்தியால் - ஆசையால். ஆணவம் உடையாரை இறைவன் ஆட்கொள்ளும் மறக்கருணையை நினைப்பித்தது. |
| திருநாவுக்கரசர் புராணம் | | அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துறையும் நாளின்கண் மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச் சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால். | | -தி.12.சேக்கிழார். | | | |