1676. சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால் கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. | |
| 5 |
1677. | ஈட்டும் மாநிதி சால இழக்கினும் வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் காட்டில் மாநட மாடுவாய் காவெனில் வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே. | |
| 6 |
|
| பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர். |
| கு-ரை: இருந்து - அமைந்திருந்து. ஏழைகாள் - அறிவற்றவர்களே. அருந்தவந்தரும் - பெறுதற்கரிய தவத்தினாலாம் பயனைத்தரும். பொருந்து - உடலிற் பொருந்திய. நோய் - துன்பம். பிணி - நோய். துரப்பதோர் - நீக்குவதொரு. மன்னும் - நிலைபெற்ற. |
| 5. பொ-ரை: உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர். |
| கு-ரை: சாற்றிச் சொல்லுவன் - பலருமறியக் கூறுவன். தரணியீர் - உலகத்தவர்களே. மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த. |
| 6. பொ-ரை: வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடுகாட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லராவர். |
| கு-ரை: ஈட்டும் - சேர்க்கும். மாநிதி - மிக்க செல்வம். சால - மிக. வீட்டும் - நம்மை அழிக்கும். காட்டில் - இடுகாட்டில். கா - காப்பாற்றுவாயாக. எனில் - என்றழைத்தால். வாட்டம் - இயமவாதனையாம் துன்பம். |