1678. ஐய னேயர னேயென் றரற்றினால் உய்ய லாமுல கத்தவர் பேணுவர் செய்ய பாத மிரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. | |
| 7 |
| * * * * * * * * * * * * * * |
| 8,9 |
1679. | உந்திச் சென்று மலையை யெடுத்தவன் சந்து தோளொடு தாளிற வூன்றினான் மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென அந்த மில்லாதோ ரின்பம் அணுகுமே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| 7. பொ-ரை: தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப்பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர். |
| கு-ரை: அரற்றினால் - பல்காலும் சொன்னால். செய்யபாதம் - சிவந்த திருவடிகள். வையம் - உலகம். |
| 8,9 * * * * * * * * * * * * |
| 10. பொ-ரை: செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக்கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும். |
| கு-ரை: உந்திச் சென்று - தேரைச் செலுத்திக்கொண்டு சென்று எனலுமாம். சந்து - மூட்டுவாய். இற - நொறுங்க. அந்தம் - முடிவு. அணுகும் - நெருங்கும். |