| 62. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் |
| பதிக வரலாறு: |
| திருப்பழையாறை வடதளியினின்றும் திருவானைக்காவிற்குச் செல்லும் பொழுது பொன்னியின் இருமருங்கும் உள்ள சிவதலங்களைப் பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்தமிழ்மாலை.(தி.12.திருநா.புரா.301.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:175 | பதிக எண்:62 |
| திருச்சிற்றம்பலம் |
1690. | ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே. | |
| 1 |
1691. யாவ ருமறி தற்கரி யான்றனை மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை நாவி னல்லுரை யாகிய நாதனைத் தேவனைப் புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: ஒப்பற்றவனும், மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும், அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும், தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று, கண்டு, உய்ந்தேன். |
| கு-ரை: ஒருத்தனை - மூவுலகொடு தேவர்க்கும் ஒருவன் என்று ஏத்தப்படுபவனை. அருத்தனை- பொருளாயிருப்பவனை. கருத்தனை - முதற் பொருளானவனை. கடுவாய்ப்புனல் - கடுவாய் என்னும் ஆற்றின் தண்ணீர். திருத்தன் - திருத்தமானவன். உய்ந்தேன் என்பது உய்ந்தென் எனக் குறுகியது. ஏ - அசை. கடுவாய் நதிக்கரையில் உள்ள புத்தூர் என்க. |
| 2. பொ-ரை: எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும், மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும், நாவில் நல்ல |