பக்கம் எண் :

620திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1692.
அன்ப னையடி யாரிடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

3

1693.

மாதனத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

4


உரையாகி அருளும் நாதனும், தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன்.
     கு-ரை: மூவரின் முதலாகிய மூர்த்தியை-அரி அயன் அரன் என்னும் மூவரில் தலைவராயிருப்பவனை. நாவில் நல்லுரையாகிய நாதன்-நாவின்கண்ணிருந்து வரும் நல்ல உரைகளின் வடிவாயிருப்பவன்.
     3.பொ-ரை: அன்பே வடிவானவனும், அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன்.
     கு-ரை: இடர்-துன்பம். தென்புத்தூர்-கடுவாயாற்றின் தென் கரையிலமைந்த புத்தூர். நம்பன்-மேலானவன், பழையவன்.
     4.பொ-ரை: பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும், மகாதேவனும், மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திருமுழுக்குக் கொள்பவனும், சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன்.
     கு-ரை: மா-பெரிய. தனத்தை -செல்வங்களின் வடிவாயிருப்பவனை. மாறிலா - ஒப்பில்லாத, கோதனத்தில்-பசுவினிடம் கிடைக்கும் செல்வங்களில் அல்லது பசுவின் பாற்காம்புகளில். ஐந்து- பஞ்சகவ்வியம்.