பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)62.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்621

1694.
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்
கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண் டருவினை யற்றெனே.

5

1695.
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.

6

1696.

உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை
அம்ப ரானை யமலனை யாதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.

7


    5. பொ-ரை: மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும், திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன்.
    கு-ரை: குண்டுபட்ட குற்றம்-சமணர்களிடையே அகப்பட்ட குற்றம். தவிர்த்து - நீக்கி. கண்டனை -நீலகண்டனை. அண்டன்- உலகங்களின் வடிவானவன். அற்றேன்- நீங்கினேன்.
    6. பொ-ரை: பாசமாகிய கட்டினை அறுத்து, என்னை ஆட்கொண்ட பெருவீரனும், மணவாளக்கோலம் உடையானும், பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று.
    கு-ரை: பந்தபாசம் -அன்புப் பிணிப்பாகிய ஆசை. மைந்தனை- வலிமையுடையவனை. கந்தம் - மணம். கண்டு- காணுதலால். இனிதாயிற்று-என் வாழ்வு இனிதாயிற்று என்க.
    7. பொ-ரை: தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும், உருத்திரமூர்த்தியும், அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும், மலம்