1697. மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே. | |
| 8 |
1698. | இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தெனே. | |
| 9 |
|
| அற்றவனும், ஆதியானவனும், சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று. |
| கு-ரை: உம்பரானை - தேவர்கள் தலைவனை. உருத்திர மூர்த்தியை-அழித்தற்கடவுளாய்ச் சங்காரகாரணனாயிருப்பவனை. அம்பரானை - ஆடையணிந்தவனை அல்லது அம்பரனை எனப் பிரித்து அழகிய மேலானவனை என்க. அம்பர் என்னும் தலத்திலிருப்பவனை எனலுமாம். அமலன்-குற்றமற்றவன். ஆதியை - முழுமுதற் கடவுளை. கம்பு நீர் - சங்குகளை உடைய நீர். |
| 8. பொ-ரை: குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும், பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று. |
| கு-ரை: மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து- நீங்கச் செய்து. நேசமாகிய-அன்பு வடிவமாகிய. நித்தமணாளனை - என்றும் மணவாளக் கோலத்திலிருப்பவனை. பூசநீர் - பூசநாளில் தீர்த்த விசேடமுடையது. |
| 9. பொ-ரை: பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத்தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல், கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன். |