1699. அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி யருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| கு-ரை: இடுவாரிட்ட -கொடுக்கும் குணமுள்ளவர் இட்ட. கவளம் - சோற்றுருண்டை, கவர்ந்து -உண்டு. இரு -பெரிய. கடுவாயிட்டவர் - கடுக்காயை வாயின்கண் இட்டவர். கட்டுரை - அறிவுரை. கொள்ளாதே- ஏற்றுக்கொள்ளாமல்; தம்முன்னைநிலை நினைந்து கூறியது. ஆட்படவே பெற்று - ஆளாகுந்தன்மையையே பெற்று. நான் பாக்கியம் செய்தேன் - நான் சிறந்த பாக்கியத்தைச் செய்தவனானேன். |
| 10. பொ-ரை: இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய, அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன். |
| கு-ரை: ஆற்றல் -வலிமை. திரைக்கொள் -அலைகளைக் கொண்ட. |
| திருவாப்பனூர்ப் புராணம் | | மண்ணாசை பெண்ணாசை மூன்றுநீத்து மனத்தாசை யறவெறிந்தா னந்த நீர்பாய் கண்ணாசை சிவபெருமான் காட்சிக் காக்கிக் கருத்தாசை யவனருட்கே கைம்மா றாக்கி யுண்ணாசை மருந்தனையார் புகலூர் மன்னு முழவாரப் படையாளி யுருகிப்பாடும் பண்ணாசைத் திருநாவுக்க கரையன் பாதம் பத்திபழுத் தொழுகநெஞ்சிற் பதித்து வாழ்வாம். | | -கந்தசாமிப்புலவர். | | | |