பக்கம் எண் :

624திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

63. திருத்தென்குரங்காடுதுறை

பதிக வரலாறு:
திருநாவுக்கரசர் வேள்விக்குடி, எதிர்கொள்பாடி பணிந்து திருக்கோடிகா, ஆவடுதண்துறை இவற்றை வணங்கச் செல்லும் பொழுது, தென்குரங்காடுதுறையைப் பணிந்து பரவியது இத்திருப்பதிகம். (தி.12 திருநா.புரா.190.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:176

பதிக எண்:63

திருச்சிற்றம்பலம்

1700.

இரங்கா வன்மனத் தார்க ளியங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே.

1

1701.
முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட்டிருந்ததே.

2


     1.பொ-ரை : அலைகள் ஆடுகின்ற பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான், இரங்காத வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு பொடியாக்கியவன் ஆவன்.
     கு-ரை: இரங்கா வன்மனத்தார்கள்-பிறர் துன்பங்கண்டு இரங்காத கல்மனங்கொண்டவர்கள். இயங்கும் -ஊர்ந்து செல்லும். முப்புரம் - மூன்று கோட்டைகள். காவல் அழிய - காத்தல் தொழில் அழியும்படி. பொடியாக்கினான் - நீறாக்கியவன். தரங்கம் ஆடும் - அலைகள் அசையும். தடநீர் - மிக்கநீர். கோலம் -அழகிய.
     2. பொ-ரை: முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள்