1702. குளிர்பு னற்குரங் காடுது றையனைத் தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும் தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே. | |
| 3 |
1703. | மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் குணவன் காண்குரங் காடுதுறைதனில் அணவன் காண்அன்பு செய்யு மடியர்க்கே. | |
| 4 |
|
| மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான். |
| கு-ரை: பவளத்து ஒளிர் தொத்து - ஒளிர் பவளத் தொத்து என மாறுக. விளங்கிய பவளக் கொத்துப் போன்றவன் என்பது பொருள். கொத்தலர் சோலைசூழ் குரங்காடுதுறை என்க. அண்ணித்தல்-இனித்தல். |
| 3.பொ-ரை: குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத் தெளிந்தது. |
| கு-ரை: தளிர்நிறத் தையல் -தளிர்போன்ற நிறத்தையுடைய பார்வதி. உள்ளம் -மனம். தெளிவினை - தெளியவேண்டிய பொருளாயுள்ள இறைவனை. தெளிய - விளங்க, தெளிந்திட்டது- உணர்ந்து தெளிந்து கொண்டது. |
| 4. பொ-ரை: அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக்கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும். எண் குணத்தானும், குரங்காடுதுறையில், அண்ணியவனும், ஆவன். |
| கு-ரை: மணவன் - எப்பொழுதும் மணவாளனாயிருப்பவன். மலைமகளாய பார்வதிக்கு நித்யமங்கலத்தைச் செய்யும் கணவன் என்க. கலைஞானிகளால் காதல் செய்யப்படும் எண்குணவன் என்க. |