1704. ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் காலத் தான்உயிர் போக்கிய காலினன் நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி கோலத் தான்குரங் காடு துறையனே. | |
| 5 |
1705. | ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும் கூட்டி னான்குரங் காடு துறையனே. | |
| 6 |
|
| குணவன்-குணங்களை உடையவன். எண்குணங்களாவன-தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை, முற்றுமுணர்தல் என இவை. அணவன்-அணுகியிருப்பவன் , அன்பு செய்யும் அடியார்க்கு அருளுவதற்காகக் குரங்காடுதுறையில் அணவன் என முடிவு செய்க. |
| 5. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன். |
| கு-ரை: ஞாலத்தார் -உலகத்தார். காலத்தான்-காலன், இயமன். நீலம் ஆர்மிடறு -நீலக்கறை பொருந்திய கழுத்து; அத்து சாரியை. |
| 6. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார் திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக் கூட்டுவித்தவனும் ஆவன். |
| கு-ரை: அமணரோடு என்றனை ஆட்டினான் என்க. ஆட்டினான் -கூட்டிஆட்டுவித்தான், தன-தன்னுடையனவனாகிய. பொன்னடிக்கு-பொன்போன்று பொதிதற்குரிய திருவடிகளுக்கு. பாட்டினான்.-திருப் பாடல்களைப் பாடச்செய்தான். வினை |