1706. மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை ஓத்தன் தாரகன் றன்னுயி ருண்டபெண் போத்தன் தானவன் பொங்கு சினந்தணி கூத்தன் தான்குரங் காடு துறையனே. | |
| 7 |
1707. | நாடி நந்தம ராயின தொண்டர்காள் ஆடு மின்அழு மின்தொழு மின்னடி பாடு மின்பர மன்பயி லும்மிடம் கூடு மின்குரங் காடு துறையையே. | |
| 8 |
|
| வீட்டினான் -இருவினைகளை அழியச் செய்தான். மெய்யடியார் - உண்மை அடியார். |
| 7. பொ-ரை: வேதங்களில் கூறிய முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத் தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன். |
| கு-ரை: மாத்தன்-பொன்னின் உயர்ந்த மாற்றுப் போன்றவன்; பெரியவன். மறையார் முறையால் -வேதங்களிற் பொருந்திய இலக்கண நெறியால் தான் மாத்தன் என மாற்றுக. மறைஓத்தன் - வேதமாகிய உண்மை நூலை உடையவன். தாருகன் தன் உயிர் உண்ட பெண் போத்து - தாருகன் என்ற அரக்கனை அழித்து அவனுடைய உயிரைப் போக்கிய காளியை வென்ற. போத்தன் -வீரன். போத்தன் தானவன் - வீரத்துடன் வந்த முயலகன். சினம் -இருவருடைய கோபத்தை. தணி - அடக்கிய. கூத்தன் -திருக்கூத்தாடுபவன். |
| 8. பொ-ரை: நம் தமராகிய தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக. |
| கு-ரை: நாடி-சென்று. நம் தமராய -நம்முடைய சுற்றத்தினராய. ஆடுமின் -மகிழ்ச்சிக் கூத்தாடுங்கள். "ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை, பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை, துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை |