பக்கம் எண் :

628திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1708.
தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னைஅயிற் சூலத்தால்
கொன்ற வன்குரங் காடு துறையனே.

9

1709.

நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழுப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.

10


தெருவுதோறலைகிலை செய்வதொன்றறியேனே". (தி.8 திருவாசகம் -35.)
     9. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் 'இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன்.
     கு-ரை: தென்றல் தேருடையான் -மன்மதன். நன்னெடும்-நல்ல பெரிய. பொன்ற -அழிய. வெங்கனல் பொங்க -கொடிய கோபத்தீ பெருக. விழித்தவன் -நெற்றிக்கண்ணால் சினந்தவன். அன்று அவ்வந்தகன் எனப் பிரித்து மார்க்கண்டேயர் வேண்டிய அன்று அந்த இயமனை என்க. அயில் - கூரிய.
     10. பொ-ரை: நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.
     கு-ரை: நால்வர். -சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் உற்ற -பொருத்தமான.நல்மொழி-நல்ல உபதேச மொழி. பற்றும் -நம்மைப் பிடிக்கும். பாறும்-அழியும்.